ரத்த சோகை பிரச்சினையை நம்மை நெருங்காமல் பாதுகாக்கும் பீர்க்கங்காய்..!

கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, தயாமின், வைட்டமின் சி, இரும்புச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
இதில் கலோரிகள் குறைவாக மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது.
இது அதிக நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி என்பதால், உடலில் உள்ள அதிகப்படியான சூட்டைக் குறைக்கும் தன்மைகொண்டது.
உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியை பராமரித்து, ரத்த சோகை பிரச்சினை வராமல் தடுக்கிறது.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
இதில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.