வல்லாரை கீரையின் நன்மைகள்..!
வல்லாரையில் உள்ள ஏசியாடிகோசைட் எனும் பண்பு, தோல் மற்றும் நகங்களைப் பராமரிக்கும் தன்மைகொண்டது.
ஞாபகச் சக்தி அதிகரிப்பதில் வல்லாரை கீரை முக்கிய பங்காற்றுகிறது.
வல்லாரையில் மன அழுத்தத்தை கொடுக்கும் கார்டிசோல் ஹார்மோன் உற்பத்தியை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
வல்லாரையில் ஆர்த்ரிட்ஸ், கெளட் போன்ற முழங்கால் பிரச்சினையை போக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.
ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் ஹைப்போகிளைசீமியா போன்ற நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க வல்லாரை உதவுகிறது.
வல்லாரையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள், கூந்தல் வளர்ச்சியை ஆதரிக்கிறது.
வல்லாரை கீரை வாய்ப்புண், பேதி, சீதபேதி, வீக்கம், காய்ச்சல், படை போன்ற பல்வேறு உடல் கோளாறுகளைக் குணப்படுத்த உதவும்.
வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லில் உள்ள கறைகளைப் போக்கும். பல் ஈறுகளைப் பலப்படுத்தும்.
இது கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கி கண் நரம்புகளுக்கு நன்மை அளிக்கும்.