ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
கொண்டைக்கடலையில் வைட்டமின் பி, செலினியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம் ஆகியச் சத்துகள் அதிகளவில் உள்ளன.
கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கொண்டைக்கடலை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோய் அபாயத்தை குறைகிறது.
கொண்டைக்கடலையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது.
சுண்டலில் கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய கனிமச்சத்துக்கள் இருப்பதால், இவை உடல் எலும்புகளுக்கு உறுதித்தன்மை அளிக்கிறது.
கொண்டைக்கடலை தாவர புரதத்தின் முக்கிய ஆதாரமாகும். இவை தசைகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
இதில் உள்ள நுண்சத்துக்கள், போலிக் அமிலம் கர்ப்பிணி பெண்களுக்கு கருவளர்ச்சி மற்றும் மாதவிடாய் சுழற்சியினை சரிசெய்ய உதவக்கூடியது.
கொண்டைக்கடலை, மார்பக புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதை தடுக்கிறது.
கொண்டைக்கடலை ஊறவைத்து, சாப்பிடுவதால் ஆண்மை அதிகரிக்கக்கூடும்.