காலையில் வெறும் வயிற்றில் வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
நிலக்கடலையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள்,ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புச்சத்து ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.
வேர்க்கடலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இவை அனைத்து வகையான புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் தடுக்கிறது.
இதில் உள்ள மோனோசேச்சுரேடட் மற்றும் பாலிஅன்சேச்சுரேடட் கொழுப்புகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
வேர்க்கடலை நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. இது மற்ற உணவுகளை உட்கொள்வதை குறைக்கிறது. இதனால் உடல் எடை கட்டுப்படும்.
இதில் நிறைவான ஆண்டிஆக்ஸிடண்ட் சத்து இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது.
இது குறைவான கிளைசமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளது. இதை சாப்பிடுவதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
நிலக்கடலையில் நியசின் மற்றும் போலேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது மூளையின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
இதில் உள்ள வைட்டமின் இ மற்றும் சி சத்துக்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்
தசைகளை வலுப்படுத்தவும், சீரமைக்கவும் நிலக்கடலை தூண்டுதலாக அமையும்.