கர்ப்பிணிகர்ப்பிணி பெண்கள் மட்டுமின்றி மற்றவர்களும் மாங்காய் சாப்பிடுவதன் மூலம் கோடை காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல் நல பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
மாங்காயில் வைட்டமின்கள் ஏ, பி6, சி மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன. அதனை சாப்பிடுவதால், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும். மாங்காயில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடென்டுகளும் உள்ளன.
வெப்பமான கோடை மாதங்களில் உடல் எடையை குறைக்க விரும்பினால், பச்சை மாங்காய் சிறந்த நண்பனாக விளங்கும். பழுத்த மாம்பழங்களை விட இதில் கலோரிகள் குறைவாக இருக்கும்.
பச்சை மாங்காயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளம் உள்ளன. அவை உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன.
கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே குறையக்கூடும். பச்சை மாங்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
அதிக வியர்வை கொண்டவர்கள் பச்சை மாங்காயை தாராளமாக உட்கொள்ளலாம். ஏனெனில் அது சரும துளைகளில் இருந்து நீர் வெளியேறுவதை கட்டுப் படுத்தக்கூடியது.
கோடை கால வெப்பம் மற்றும் உணவு முறைகளால் பலர் செரிமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். பச்சை மாங்காய் சாப்பிடுவதன் மூலம் செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்கச் செய்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
பழுத்த மாம்பழங்கள் சூடான தன்மையை கொண்டிருக்கும். ஆனால் பச்சை மாங்காய்கள் குளிர்ச்சியான குணங்களை கொண்டவை. எனவே, மாங்காய் உட்கொள்வதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க முடியும்.