குளிர்காலத்தில் இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

இஞ்சி அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாகும். இவை இருமலைக் குறைக்கவும், தொண்டை புண்களை ஆற்றவும் உதவுகிறது. இது குளிர்ந்த காலநிலையில் சிறந்த தேர்வாகும்.
இஞ்சி கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இது குளிர்காலத்தில் ஏற்படும் இதய அபாயத்தை தடுக்கிறது.
இஞ்சியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தவும், குளிர்கால சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராடவும் உதவுகிறது.
இஞ்சி செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது சிறந்த செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
இஞ்சி உடலில் இயற்கையாகவே வெப்பத்தை உருவாக்குகிறது. இது குளிர் மாதங்களில் உடலை சூடாக வைத்திருக்கும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
இஞ்சிச் சாறு சளியை நீக்கி, சுவாசக் குழாயில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும் தன்மைகொண்டது.
இஞ்சி இன்சுலின் சுரப்பு மற்றும் உணர்திறனுக்கு உதவுகிறது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
இஞ்சியில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் குளிர்ந்த காலநிலையில் ஏற்படும் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியைப் போக்க உதவுகிறது.