வெள்ளரிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
இந்த பழத்தில் வைட்டமின் சி, பி 1, பி 6 மற்றும் கே, போலேட், காப்பர், மெக்னீசியம் மற்றும் நார்சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
வெள்ளரிப்பழம், மூளைக்கு ஆக்சிஜன் ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதனால் மன அழுத்தம் குறைந்து மனஅமைதி அதிகரிக்கிறது.
வெள்ளரிப்பழத்தில் நீர்ச்சத்து நிறைந்துக் காணப்படுகிறது. இது கோடைகாலத்தில் நமது உடலை நீர்ச்சத்துடன் இருக்க பெரிதும் உதவும்.
இதிலிருக்கும் பொட்டாசியம் சத்து உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
இந்த பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்து காணப்படுவதால், இது கண் பார்வையை மேம்படுத்துகிறது.
இதில் மிக குறைந்த அளவே கொழுப்பு சத்து இருப்பதால், எடை குறைப்பில் பெரும் பங்கு வகிக்கிறது.
வெள்ளரிப்பழம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தன்மைக்கொண்டது. மேலும் நரம்புகள் மற்றும் தசைகளை தளர்த்தி சீரான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
சீறுநீரக கற்கள் உருவாவதை குறைக்கும் தன்மைக்கொண்டது.