பழங்காலத்தில் இருந்தே துளசியை மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். துளசியில் தினமும் தேநீர் தயாரித்து பருகினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
துளசியில் ஆண்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இவை சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, ஒவ்வாமை போன்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கு துளசி டீ நன்மை பயக்கும்.
துளசியில் பிளவனாய்டுகள், பாலிபினால்கள் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. இவை செல்களுக்கு சேதம் ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன.
அஜீரணம், வாயு தொல்லை போன்ற வயிற்று கோளாறுகளை போக்கி செரிமானம் சீராக நடைபெறுவதற்கு துளசி டீ உதவி புரியும்.
துளசி ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என்று சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதனால் நீரிழிவு நோயாளிகள், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் துளசி டீ பருகுவது பயனுள்ளதாக இருக்கும்.
துளசி உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் வழிவகை செய்யும். உடல் எடையை சீராக தக்கவைப்பதற்கு தினமும் துளசி டீயும் பருகி வரலாம்.
துளசி ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவும். இதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கும்.