இதில் குறைவான கலோரி மற்றும் பைபர் சத்து நிறைந்திருப்பதால் எடை இழப்பிற்கு உதவுகிறது.
புற்றுநோய் செல்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தி கட்டி உருவாவதை நிறுத்துகிறது.
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறது.
பாகற்காய் மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.
செய்முறை : பாகற்காய் எடுத்து நன்றாகக் கழுவவும். அவற்றை பாதியாக வெட்டி அதன் விதைகளை எடுத்து விட்டு அதை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை எடுத்து, பாகற்காய், தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
கசப்பை போக்க நன்கு கலந்து சுமார் 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள். பின் வடிகட்டியைப் பயன்படுத்தி, பாகற்காயை பில்டர் பண்ணி எடுத்துக்கொள்ளவும், மீதமுள்ள தண்ணீரை நீக்கிவிடவும்
பின்னர் ஒரு மிக்ஸியை எடுத்து அதில் பாகற்காய் துண்டுகள், தண்ணீர், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைக்கவும்.
பின் நன்கு அரைந்ததும் ஒரு பாத்திரத்தில் மாற்றி எடுத்துக் கொள்வோம். ஆரோக்கியமான பாகற்காய் ஜூஸ் தயார்.