பெருங்காயத்தினால் கிடைக்கும் பயன்கள்!

பெருங்காயத்தை பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம். ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.
செரிமானத்துக்காக பயன்படுத்தப்படும் கை வைத்திய முறையில் பெருங்காயத்துக்கு முதல் இடம் உண்டு. மேலும் வயிற்று உப்புசம், வயிற்று வலி மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தும்.
இஞ்சிச் சாறு மற்றும் தேனுடன் பெருங்காயத்தைக் கலந்து குடிக்கலாம். இது குடலில் உள்ள கிருமிகளை நீக்கி, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
முட்டையின் மஞ்சள் கருவுடன் பெருங்காயத்தைக் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.
பெருங்காயப் பொடியை வாணலியில் போட்டு மிதமான தீயில் வறுத்து, சொத்தைப் பல்லின் குழியில் வைத்து கடித்துக் கொண்டால் பல் வலி சரியாகும்.
பெருங்காயம் உடலில் உள்ள வாதத்தையும், கபத்தையும் சமநிலைப்படுத்தி, நச்சுக்களை அழிக்கும் தன்மை கொண்டது.
பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அதன் புகையை சுவாசித்து வந்தால் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.
½ டீஸ்பூன் பெருங்காயத்தூளை வெந்நீரில் கலந்து தினமும் காலை வேளையில் குடித்து வருவது உடலில் உள்ள கெட்டக் கொழுப்பைக் கரைக்கும்.
அளவுக்கு அதிகமாக பெருங்காயத்தை பயன்படுத்தினால் உடலில் பித்தம் அதிகரிக்கும்.