உணவில் ராஜ்மா (கிட்னி பீன்ஸ்) சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

ஆங்கிலத்தில் கிட்னி பீன்ஸ் என்று அழைக்கப்படும், ராஜ்மாவில் அதிக அளவு புரதம் உள்ளது.
ராஜ்மாவில் அதிக அளவு இரும்பு, மெக்னீசியம், கார்போஹைட்ரேட், பொட்டாசியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, சோடியம், தாமிரம், போலேட், கால்சியம் போன்றவை உள்ளன.
இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலில் ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைத்து, புற்றுநோய் அபாயத்தை குறைக்கக்கூடும்.
இதில் உள்ள புரதம், கெட்ட செல்களை அழித்து, புதிய செல்களை உருவாக்குகிறது. இது உடலின் வலிமையையும் ஆற்றலையும் பராமரிக்கிறது.
இதில் நிறைந்திருக்கும் கால்சியம், எலும்புகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ராஜ்மாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
ராஜ்மா குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
ராஜ்மாவில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது.
இதில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.