வாழைத்தண்டில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு, கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
ரத்த அழுத்தத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை எதிர்த்துப் போராடி இதய அபாயத்தை குறைக்கிறது.
தண்டில் சிஸ்டிடிஸ் இருப்பதால் அவை சிறுநீரகப்பையை தொந்தரவு செய்யும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
கொழுப்பைக் குறைப்பதன் மூலம் உடல் பருமனைக் குறைக்க காரணமாகிறது.
இதில் உள்ள நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வாழைத் தண்டில் வைட்டமின் பி6 நிறைந்திருப்பதால் நீரிழிவு நோய் பிரச்சினைக்கு சிறந்த தேர்வாகும்.
உடலில் இருந்து நச்சுகளை அகற்ற வாழைத்தண்டு உதவுகிறது. சிறுநீரக கற்களை இயற்கையான முறையில் அகற்றவும் பயனுள்ளதாக இருக்கும்.