சிங்கப்பூர்க்கு டூர் போறீங்களா? அப்போ இந்த 09 இடத்த மிஸ் பண்ணிடாதீங்க!
பட்டாம் பூச்சி தோட்டம் : சிங்கப்பூர் ஜாங்கி விமான நிலையத்தில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி தோட்டம் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்விடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான பூக்களும், தாவரங்களும், பசுமை நிறைந்து காணப்படுகின்றன. அதோடு அங்கு 6 மீ உயரத்தில் இருந்து வீழ்கின்றன கிரோட்டோ நீர்வீழ்ச்சி கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.
லிட்டில் இந்தியா : லிட்டில் இந்தியா என்பது முழுக்க முழுக்க தமிழ் இனத்தவருக்கான குடியிருப்புப் பகுதியாகும். ‘லிட்டில் இந்தியா’ சிங்கப்பூர், என்பது சிங்கப்பூர் ஆற்றின் (Singapore River) கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறப் பகுதியாகும்.
கார்டன்ஸ் பை தி பே : கார்டன்ஸ் பை தி பே என்பது, நகரத்தில் பசுமை மற்றும் தாவர மேம்பாடு மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாகும். இதன் கட்சியை மேலிருந்து பார்த்தால் மிகவும் பசுமையாகவும் அழகாவும் நம்முடைய கண்களுக்கு விருந்தளிக்கும் நிலையில் அமைந்துள்ளன.
யுனிவர்சல் ஸ்டுடியோ : யுனிவர்சல் ஸ்டுடியோ இது புகைப்படப் பிரியர்களுக்கான சிறந்த இடமாகும். இந்த இடமானது சென்டோசா தீவில் அமைந்துள்ளது. இந்த இடத்தை சுற்றிலும் அதிகப்படியான பொழுதுபோக்கு சிறப்பம்சங்கள் பெருகிக் காணப்படுகின்றன.
ஆர்ச்சர்ட் ரோடு : ஆர்ச்சர்ட் ரோடு, இது சிங்கப்பூரின் முக்கிய கடை வீதியாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும்கூட அடிக்கடி வருகை தருகின்றனர். மால்கள், உணவகங்கள், இரவு விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் என பலவும் ஒரே இடத்தில் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக தேர்வு செய்து வருகின்றனர்.
செந்தோசா : செந்தோசா சிங்கப்பூரில் உள்ள மிகவும் பிரபலமான தீவாகும். செந்தோசா என்ற வார்த்தைக்கு ‘மகிழ்ச்சி’ எனப்பொருள். சுற்றுலாவின் சிறந்த அனுபவத்தை அளிக்கும் இந்த இடத்தை காண ஆண்டுதோறும் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா : சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா என்பது மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இது அதிகளவிலான மக்களால் பார்வையிடப்பட்ட பகுதியாகவும் கருதப்படுகிறது. இந்த தோட்டத்தில் சுமார் 60,000 க்கும் மேற்பட்ட தாவரவகைகள் உள்ளன.
நைட் சபாரி : சிங்கப்பூரின் முக்கிய இடங்களில் ஒன்றாக விளங்கும் இந்த நைட் சபாரி 1984 இல் மாண்டாய் நகரில் திறக்கப்பட்டது. இதுதான் உலகின் முதலாவது இரவு நேர உயிரியல் பூங்காவாகும். இது நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும்.
சிங்கப்பூர் ப்ளையர் : சிங்கப்பூர் ப்ளையர் ஒரு மாபெரும் ராட்டினம் ஆகும். இது 2008 ஆம் ஆண்டு திறக்கப்பட்டபோது, இதுவே உலகின் மிக உயரமான பெர்ரிஸ் சக்கரமாக விளங்கியது. வண்ணமயமான கண்களைக் கவரும் மின்விளக்குகள் பொருத்தி கண்கொள்ளா காட்சியாக காட்சியளிக்கும்.