அன்றாட உணவில் சேர்க்கும் பாசிபருப்பில் இவ்வளவு நன்மைகளா?

புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்-பி6, நியாசின், போலேட் ஆகியவை பாசிபருப்பில் நிறைந்து காணப்படுகிறது.
எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க, பாசிப்பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
சர்க்கரை நோய் பிரச்சினை இருப்பவர்களுக்கு பாசிப்பருப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
பாசிப் பருப்பில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமான அமைப்பை மேம்படுத்த பயனுள்ளதாக கருதப்படுகிறது.
இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேலையை செய்கின்றன.
பாசிப் பருப்பில் சருமம் மற்றும் கூந்தலுக்கு தேவையான நன்மைகள் நிறைந்துள்ளது.
பாசிப் பருப்பு உடலின் கழிவுகளை வெளியேற்றக்கூடிய தன்மை கொண்டிருப்பதால், இவை புற்றுநோயை அபாயத்தை குறைக்கலாம் என கருதப்படுகிறது.
ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கும் பண்பு பாசிபருப்பில் நிறைந்துள்ளது என கூறப்படுகிறது.