புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் ஆப்பிள்..!
தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் நுரையீரல், பெருங்குடல் மற்றும் குடல் பாதை புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.
ஆப்பிளில் புரோசியானிடின் பி2 எனப்படும் பாலிபீனால் ஏராளமாக உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லையை போக்குகிறது.
இதில் பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் போன்ற பண்புகள் நிறைந்துள்ளது. இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
ஆப்பிளில் வைட்டமின் ஏ, சி மற்றும் குவெர்செடின் போன்றவை காணப்படுகிறது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஆப்பிளில் உள்ள பாலிபீனால்கள் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது.
இதில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
ஆப்பிள் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதில் ஆப்பிள் முக்கிய பங்காற்றுகிறது.
ஆப்பிளில் உள்ள ப்ளோரிசின் எனும் பண்பு சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.