ஆளி விதையின் அற்புதமான நன்மைகள்..!

ஆளி விதைகளை பச்சையாக சாப்பிடுவதை விட வறுத்து சாப்பிடுவது நல்லது. ஆளி விதைகளை வறுப்பதால் அவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் பைடிக் அமிலம் நீக்கப்படுகிறது. முளைக்க வைத்து சாப்பிடுவதும் நல்லது.
ஆளி விதையில் (Flaxseeds ),நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரதம், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தை ஒழுங்குபடுத்தும் தன்மைகொண்டது.
ஆளி விதையில் வைட்டமின் ஈ நிறைந்து காணப்படுகிறது. இது முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஆளி விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமான மண்டலத்தை ஒழுங்குபடுத்துகிறது.
ஆளி விதை ரத்த சர்க்கரை அளவை நன்றாக கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்து விளங்குகிறது.
ஆளி விதை எல்.டி.எல் கொழுப்பை (கெட்ட கொழுப்பை) குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றன. இவை இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.
ஆளி விதையில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது உடலில் நாள்பட்ட வீக்கம், வலி ஆகியவை ஏற்படாமல் காக்கிறது.
ஆளி விதையில் காணப்படும் ஆல்பா-லினோலெனிக் அமிலம், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.