கருப்பு திராட்சையின் 10 ஆச்சரியமான நன்மைகள்..!

சரும நலன்: கருப்பு திராட்சையில் வைட்டமின்கள் சி, ஈ ஆகியவை உள்ளன. இவை வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
உடல் எடை: கருப்பு திராட்சையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். இவை பசி உணர்வை கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம்: திராட்சையில் ரெஸ்வெராட்ரோல், குர்செடின் போன்ற ஆன்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. இவை தமனிகளில் அடைப்பு உருவாவதை தடுப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி: கருப்பு திராட்சையில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
புற்றுநோய்: கருப்பு திராட்சையில் இருக்கும் ரெஸ்வெராட்ரோல்,குவெர்செடின் போன்றவை புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளன.
கொழுப்பு: கருப்பு திராட்சையில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் சேர்மங்கள் உள்ளன. இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை இதன் மூலம் தவிர்க்கலாம்.
செரிமானம்: மற்ற பழங்களை விட கருப்பு திராட்சையில் நார்ச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுப்பதற்கு அவை உதவுகின்றன.
வீக்கம்: கருப்பு திராட்சையில் வீக்கத்தைக் குறைக்க உதவும் கலவைகள் உள்ளன. நீரிழிவு, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க இவை உதவும்.
செல்கள்: கருப்பு திராட்சையில் பாலிபினால்கள், அந்தோசயின்கள் போன்ற ஆன்டிஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளன. அவை செல்களுக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாக்கும்.
மூளை: கருப்பு திராட்சையில் உள்ள ஆன்டிஆக்சிடெண்டுகள் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவும். முதுமைக் காலத்தில் அறிவாற்றல் குறையாமல் பாதுகாக்கவும் வழிவகை செய்யும்.