தமிழ்நாட்டின் மிக முக்கிய சுற்றுலா தலங்கள்

ஊட்டி: பார்ப்பதற்கும், உணர்வதற்கும், அனுபவிக்கவும் ஏதுவான, பச்சை கம்பளியில் படர்ந்து கிடக்கும் ஈரமலைத் தொடர்களின் சங்கிலிதான் ஊட்டி.
கொடைக்கானல்: கொடைக்கானலின் இயற்கை எழில் கொஞ்சும் தன்மை பயணிகளை வியப்பில் ஆழ்த்தாமல் இருப்பதில்லை. இது 'மலைகளின் இளவரசி' என அழைக்கப்படுகிறது
குன்னூர்: அற்புதமான காட்சிகள், பரந்து விரிந்த மலைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் இயற்கையான பசுமையுடன், இயற்கை விரும்பிகளுக்கு குன்னூர் சரியான இடமாகும்.
ஏற்காடு: நீங்கள் அலசி ஆராய்வதற்கான ரம்மியமான காட்சிகள் மற்றும் இயற்கை அற்புதங்கள் நிறைந்த பகுதி.
வால்பாறை: கொண்டை ஊசி வளைவுகளில் பயணம் செய்து, பசுமை நிறைந்த மலைத்தொடர்களைக் கண்டு மகிழ ஏற்ற பகுதி.
மெரினா கடற்கரை: தலைநகருக்கு வருவோர் தவிர்க்க முடியாத சுற்றுலா தலம். கடல், மணல் மற்றும் சூரிய உதயத்தின் காட்சிகள் ரசிக்கக்கூடியவை.
கன்னியாகுமரி கடற்கரை: சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் அற்புதமான காட்சிகளை காணக்கூடிய ஒரே இடம் கன்னியாகுமரி.
குற்றால அருவி: மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட ஒன்பது நீர்வீழ்ச்சிகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்குகின்றன.
ஒகேனக்கல்: வேகமான நீரோட்டம் ஒரு வெள்ளை நுரை நீரோடையாக மாறி சுற்றுலாப் பயணிகளை கவரும் காட்சியாக அமைகிறது. ஆற்றில் பரிசல் சவாரியும் மேற்கொள்ளலாம்.
தஞ்சை பெரிய கோவில்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய இந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளை கடந்து தமிழர்களின் கட்டிடக் கலையை பறைசாற்றிக்கொண்டு இருக்கிறது.