கேரளாவில் பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலங்கள்..!

மூணாறு: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலை வாழிடம் ஆகும். இது தென்னிந்தியாவின் மிக பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
ஆலப்புழா: படகு பந்தயங்களுக்கும், கடற்கரைகளுக்கும், கடற்பொருட்களுக்கும், தேங்காய் நார் தொழிலுக்கும் பெயர் பெற்றது
வர்க்கலா கடற்கரை: இக்கடற்கரை ஒய்வுக்காக வருபவர்களையும், இயற்கையையும் அதன் ரம்மியத்தை ரசிக்கவருபவர்களையும் ஒரு சேர ஈர்க்கிறது.
அதிரப்பள்ளி: திரிச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகான நீர்வீழ்ச்சி
தேக்கடி: யானைகள், புலிகள், கரடிகள் மற்றும் பல்வேறு வகையான பறவைகளைக் காணக்கூடிய இடம்.
பொன்முடி: பசுமையான காடுகள், மலையேற்ற பாதைகள் மற்றும் வனவிலங்குகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது .
கொச்சி: கேரளாவின் முக்கிய துறைமுக நகரம் மற்றும் சுற்றுலா தலமாக விளங்குகிறது
கோழிக்கோடு: அழகான கடற்கரைகள், வரலாற்று இடங்கள், கலாச்சார மையங்கள் மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றால் பிரபலமானது.
கோவளம் கடற்கரை: அமைதியான கடற்கரைகள், வரலாற்று தளங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், ஆறுகள் மற்றும் மலைகள் ஆகியவை இங்கு அமைந்துள்ளன.