விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெறட்டும்.. நமல் ராஜபக்சே வாழ்த்து

விஜய்க்கு பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெறட்டும்.. நமல் ராஜபக்சே வாழ்த்து
Published on

 கொழும்பு,

தவெக தலைவர் மற்றும் நடிகரான விஜய், தனது சினிமா கேரியருக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். வரும் ஜனவரி 09ஆம் தேதி வெளியாக உள்ள ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என விஜய் தெரிவித்துள்ளார்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மலேசியாவில் நடைபெற்றது. தனது கடைசி படத்தின் இசை வெளியீட்டு விழா என்பதால், விஜய் நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார். விஜய் தனது சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு அரசியலில் முழு மூச்சுடன் கால்பதித்துள்ளதால், அவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- திரைத்துறையில் விஜய்யின் ஆற்றலை அனைவரும் அறிவோம். சினிமா பயணத்திற்கு முடிவுரை எழுதி, புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார் விஜய். சினிமா அவரை மிகவும் மிஸ் செய்யும். எதிர்வரும் பயணத்தில் விஜய் வெற்றி பெற வாழ்த்துகள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com