சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம்: கார் மீது மோதி விபத்து

விபத்தில் 57 வயது பெண் காயமடைந்தார்
சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம்: கார் மீது மோதி விபத்து
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் பிரேவர்டு நகரில் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் நேற்று இரவு சிறிய ரக விமானத்தில் பயணித்துள்ளனர். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த விமானி பிரேவர்டு நகரின் நெடுஞ்சாலையில் விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கினார். அப்போது, விமானம் சாலையில் சென்ற கார் மீது மோதியது.

இந்த சம்பவத்தில் காரை ஓட்டி சென்ற 57 வயது பெண் லேசான காயமடைந்தார். விமானத்தில் பயணித்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com