கிரிபாட்டி தீவில் பிறந்தது புத்தாண்டு

உலகிலேயே முதல் நாடாக 2026ஐ வரவேற்றது கிரிபாட்டி தீவு.
கிரிபாட்டி தீவில் பிறந்தது புத்தாண்டு
Published on

உலக மக்கள் அனைவரும் 2026 புத்தாண்டை வரவேற்க முழு உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். உலகம் முழுவதும் ஒரே தேதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் காலநிலை மற்றும் அங்குள்ள நேர முறை என்பது ஒவ்வொரு நாட்டின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.

அந்த வகையில் உலகிலேயே முதல் நாடாக 2026ஐ வரவேற்றது கிரிபாட்டி தீவு. உலகிலேயே முதல் நாடாக, பசிபிக் தீவு நாடான கிரிபாட்டி தீவில் 2026-ம் ஆண்டு பிறந்தது. பூமிப்பந்தின் கிழக்கு கோடியில் உள்ள கிரிபாட்டி தீவு உள்ளது. புத்தாண்டு, கிரிபாட்டி தீவின் கிரிட்டிமதி நகரம் 2026-ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

இந்திய நேரப்படி மாலை 3.38 மணிக்கு கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு பிறந்ததையொட்டி, அந்நாட்டு மக்கள் புத்தாண்டை உற்சாமாக வரவேற்றனர். அதைத் தொடர்ந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் அடுத்த சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கிறது.

ஆஸ்திரேலியாவை தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா, வடகொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள், இந்தியாவிற்கு முன்னதாக அடுத்தடுத்து புத்தாண்டை கொண்டாட உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com