காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம்

தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

சென்னை,

நேற்று முன் தினம் (01-12-2024) காலை வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய "பெஞ்சல்" புயல், மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவியது.

இது, இன்று காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 'பெஞ்சல்' புயலால் புதுச்சேரியிலும், விழுப்புரம் மாவட்டத்திலும் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீட்டர் மழை பதிவானது

இந்த சூழலில் கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட 15 மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story