வைகை அணையில் 8 நாட்கள் வினாடிக்கு 650 கனஅடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
வைகை அணையில் இருந்து 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கனஅடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
வைகை அணையில் கூடுதல் இருப்பாக உள்ள தண்ணீரில் இருந்து வரும் 1-ந்தேதி முதல் 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கனஅடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"வைகை அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிருதுமால் உப வடிநிலத்திற்கு (கிருதுமால் நதி) குடிநீர் தேவைக்காக சிறப்பு நிகழ்வாக வைகை அணையில் கூடுதல் இருப்பாக உள்ள 1,684 மில்லியன் கனஅடி நீரில், வருகின்ற 01.12.2024 முதல் 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கனஅடி வீதம் மொத்தம் 450 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நீரின் இருப்பு மற்றும் நீர்வரத்தினைப் பொறுத்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story