நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்தது

விற்பனையை அதிகரிக்க விலை குறைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்தது
Published on

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக 640 காசுகள் என்கிற புதிய உச்சத்தில் நீடித்து வந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 620 காசுகளாக குறைந்து உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு முடிவடைந்து விட்டதால் முட்டையின் தேவை சற்று குறைந்து உள்ளது. எனவே விற்பனையை அதிகரிக்க விலை குறைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கறிக்கோழி கிலோ ரூ.142-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com