புயல் இருக்கும் வரை மழை மேகங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும் - பிரதீப் ஜான்


புயல் இருக்கும் வரை மழை மேகங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும் -  பிரதீப் ஜான்
x

சென்னையின் மையப் பகுதிகளில் மிதமான தீவிர மழை தொடரும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (சனிக்கிழமை) மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில், "சென்னையின் மையப் பகுதிகளில் மிதமான தீவிர மழை தொடரும். புயல் இருக்கும் வரை மழை மேகங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். எனவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. ஏரிகளின் சேமிப்பை மேம்படுத்த நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை கிடைக்கும் என நம்புகிறோம். காலை 6.00 மணி முதல் வடக்கு மற்றும் தெற்கு சென்னை பகுதிகளில் 130 முதல் 150 மி.மீ மழை பதிவாகியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story