சென்னையில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்

மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியில் இதுவரை 12 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதன்மூலம் 29 ஆயிரத்து 267 பேர் பயனடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக தண்டையார்பேட்டை மண்டலம், கலாயணபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) 13-வது முகாம் நடைபெற உள்ளது.

இந்த மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை, ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகிய சேவைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com