பல்லடம் அருகே நடந்த 3 பேர் படுகொலைக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் - அண்ணாமலை


பல்லடம் அருகே நடந்த 3 பேர் படுகொலைக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் - அண்ணாமலை
x

கோப்புப்படம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக கெட்டுப்போய் உள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில் தெய்வசிகாமணி (78 வயது), அவரது மனைவி அமலாத்தாள் (75 வயது), மகன் செந்தில்குமார் (46 வயது) ஆகியோர் கடந்த மாதம் 29-ந்தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். ஒரு வாரம் முடிந்தும் இதுவரை குற்றவாளிகள் பிடிபடவில்லை. இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று கொலையான செந்தில்குமாரின் மனைவி கவிதா மற்றும் அவர்களது குடும்ப உறவினர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-

இந்த அளவுக்கு மிகக்கொடூரமான கொலை நடைபெற்று இருப்பதற்கு போதை கலாசாரத்தை தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக கெட்டுப்போய் உள்ளது. இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது தமிழக அரசின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. தமிழகத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு தடை விதித்துள்ளது. நாம் கோர்ட்டுக்குச் சென்று சி.பி.ஐ. விசாரணை பெற்று வர ஒருவார காலமாகும்.எனவே அதற்குள்ளாகவே தமிழக முதல்-அமைச்சர் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story