ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற பயணிகள் ரெயில் பின்னோக்கி இயக்கம்


ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற பயணிகள் ரெயில் பின்னோக்கி இயக்கம்
x

ரெயில் பின்னோக்கி இயக்கப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி,

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு இன்று காலையில் சென்ற பயணிகள் ரெயில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் கடந்து சென்றது. ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு முன்னோக்கி சென்ற நிலையில், இதனை அறிந்த ரெயில் ஓட்டுநர்கள் ரெயிலை மீண்டும் பின்னோக்கி இயக்கினர்.

இதையடுத்து பயணிகள் ரெயில் தாதன்குளம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தாதன்குளம் ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டிய பயணிகள் இறங்கினர். மேலும் அங்கிருந்த பயணிகள் ரெயிலில் ஏறிய நிலையில் ரெயில் புறப்பட்டுச் சென்றது. ரெயில் பின்னோக்கி இயக்கப்படும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரெயில் ஓட்டுநர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story