'கோவையில் வங்காளதேச நபர்கள் ஊடுருவலா?' - மாவட்ட கலெக்டர் பதில்
கோவையில் வங்காளதேச நபர்கள் ஊடுருவினார்களா? என்பது குறித்து மாவட்ட கலெக்டர் பதிலளித்துள்ளார்.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"கோவை மாவட்டத்திற்கு பெரும்பாலும் பில்லூர் அணையில் இருந்துதான் தண்ணீர் வருகிறது. அதில் போதிய அளவில் தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் கோவை மாவட்டத்திற்கு நீர் தரும் அணைகளில் போதுமான அளவில் தண்ணீர் இருப்பதால், இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் வராது.
கோவை மாவட்டத்திற்குள் வங்காளதேசத்தை சேர்ந்த நபர்கள் ஊடுருவியதாக எந்த ஒரு தகவலும் எங்களுக்கு வரவில்லை. அவ்வாறு ஏதேனும் தகவல் தெரிவிக்கப்பட்டால் கண்டிப்பாக காவல்துறை மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story