தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
குடிப்பழக்கத்தால் உடல்நலம் பாதித்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி
புதுச்சேரி உருளையன்பேட்டை முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 27). கூலித்தொழிலாளி. இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துவிட்டு ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது.
இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன் பிறகும் மது குடிக்கும் பழக்கத்தை அவர் கைவிடவில்லை. இதில் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சிவக்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story