விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்ைதகள் கட்சி சாா்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி
அம்பேத்கர் படத்துக்கு காவிசாயம் பூசி திருநீரிட்டு இந்து அமைப்புகள் அவமதிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து புதுவையில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் தலையாரி, நிர்வாகிகள் தமிழ்மாறன், முன்னவன், செல்வ.நந்தன். அரிமாத்தமிழன், ஆதவன், எழில்மாறன், கார்முகில், சுடர்வாளன், லட்சுமி, தமிழ்வாணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story