புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x

வார விடுமுறையையொட்டி புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

புதுச்சேரி

வார விடுமுறையையொட்டி புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கடற்கரை சாலை

புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதன்படி இன்று விடுமுறை தினம் என்பதால் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் புதுவையில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் நிரம்பி வழிந்தன.

சுற்றுலா பயணிகள் வருகையால் பாரதிபூங்கா, தாவரவியல் பூங்கா, கடற்கரை, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச், சின்ன வீராம்பட்டினம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் களை கட்டியது. புதுச்சேரி பழைய துறைமுகம் மற்றும் தலைமை செயலகம் பகுதிகளில் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் கடலில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

புதுச்சேரி நகர பகுதியில் ஏராளமான வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் உலா வந்தன. நகரின் முக்கிய வீதிகளான அண்ணாசாலை, நேருவீதி, புஸ்சி வீதி, கடலூர் சாலை, மரப்பாலம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புதுச்சேரியில் சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர்.


Next Story