ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை
அரியாங்குப்பம் பகுதியில் ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் பகுதியில் ரவுடிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.
கொலை சம்பவம்
புதுச்சேரியில் அண்மை காலமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக அரியாங்குப்பம் போலீஸ் எல்லைக்குட்பட்ட மணவெளி, புதுக்குளம், ஓடைவெளி, சின்னவீராம்பட்டினம், வீராம்பட்டினம் சவுக்கு தோப்பு ஆகிய பகுதிகளில் உள்ள ரவுடிகள் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
போலீஸ் அதிகாரிகள் சோதனை
புதுவை சட்டம்- ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்துகுமரன், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் மோப்ப நாயுடன் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடங்கள், ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களிலும் போலீசார் சோதனை செய்தனர். ஆனால் ரவுடிகள் யாரும் சிக்கவில்லை. ஆயுதங்கள் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை.