கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது


கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது
x

புதுச்சேரி காமராஜர் சாலை எல்லையில் கோவில் உண்டியலை உடைத்து திருடியவரை போலீசாா் கைது செய்தனா்.

புதுச்சேரி

புதுச்சேரி காமராஜர் சாலை எல்லையில் ராஜய்யர் தோட்டம் பகுதியில் பிரசித்தி பெற்ற புட்லாய் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை வேல்முருகன் என்பவர் நிர்வகித்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது கோவில் உண்டியலை உடைத்து திருடியது கருவடிக்குப்பம் இடையஞ்சாவடி ரோட்டை சேர்ந்த ராஜ்குமார் (வயது 28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story