தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் சோதனை நடத்தி, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பாகூர்

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் குறிப்பிட்ட வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் தொழில்நிறுவனங்கள், கடைகளில் திடீர் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்தும் வருகின்றனர். இதன் தொடர் நடவடிக்கையாக ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் அலுவலக மேலாளர் ரவி தலைமையில் வருவாய் பிரிவு ஊழியர்கள் பாகூர் மார்க்கெட் வீதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒருசில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அபராதமாக ரூ.11,600 வசூலிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story