தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை


தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை
x

புதுச்சோியில் மது குடித்ததை தாயார் கண்டித்ததால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி

புதுச்சேரி சோனாம்பாளையம் ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் லூர்து மேரி. இவரது மகன் அஜித்குமார் (வயது 26), பெயிண்டர். நேற்று முன்தினம் அஜித்குமார் தனது நண்பனின் பிறந்த நாளையொட்டி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாயார் கண்டித்தார். இதனால் மனமுடைந்து போன அஜித்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story