கொரோனாவுக்கு முதியவர் பலி


கொரோனாவுக்கு முதியவர் பலி
x

புதுவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் பலியானார்.

புதுச்சேரி

புதுவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் பலியானார்.

84 பேர் பாதிப்பு

புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1,073 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் 84 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் 61 பேர் புதுச்சேரியையும், 18 பேர் காரைக்காலையும், 2 பேர் ஏனாமையும், 3 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதியவர் சாவு

நேற்று 93 பேர் குணமடைந்தனர். இதனிடையே புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நெல்லித்தோப்பை சேர்ந்த 73 வயது முதியவர் கொரோனா தொற்று பாதிப்புக்கு பலியானார். இதனால் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,979 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 12 பேர், வீடுகளில் 491 பேர் என 503 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். புதுவையில் தொற்று பரவல் 7.83 சதவீதமாகவும், குணமடைவது 98.60 சதவீதமாகவும் உள்ளது.


Next Story