லாட்டரி விற்ற வாலிபர் கைது
காரைக்காலில் தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காரைக்கால்
காரைக்கால் ஒப்பிலார்மணியர் கோவில் குளத்து மேடு பகுதியில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்களை பார்த்ததும் அங்கு நின்றிருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் விரட்டிப் பிடித்து சோதனை செய்ததில், சட்டை பையில் அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது செல்போனிலும், 3 எண் லாட்டரி சீட்டு எண்கள் இருந்தது.
விசாரணையில் அவர், காரைக்கால் ஒப்பிலார்மணியர் கோவில் குளத்து மேடு பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 30) என்பதும், 3 எண் லாட்டரி சீட்டு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு செல்போன் மற்றும் 2,230 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story