விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
x

புதுச்சேரி சுதேசி மில் அருகில் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியை அசுத்தபடுத்தியவர்களை கைது செய்யக்கோரி கண்டன ஆர்பட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் புதுவை சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு வக்கீல்கள் அணி செயலாளர் பார்வேந்தன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தமிழ்மாறன், முன்னவன், செல்வ.நந்தன், மரிமாத் தமிழன், ஆதவன், எழில்மாறன், கார்முகில், சுடர்வாளன், லட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் காரைக்காலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் குழு மாநில செயலாளர் வணங்காமுடி தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



Next Story