பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்


பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்
x

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டம் வில்லியனூரில் உள்ள விவசாயிகள் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் கீதநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் மாசிலாமணி, பொதுச்செயலாளர் ரவி, பொருளாளர் கலியமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் ராஜா, பெருமாள், பிரகாஷ், ராமமூர்த்தி, பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், மத்திய அரசு டெல்லியில் போராடிய விவசாய சங்கங்களிடம் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்ட விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டத்தை இயற்ற வேண்டும், மத்திய உள்துறை இணை மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 31-ந்தேதி புதுவை அண்ணா சிலை அருகே மறியல் போராட்டம் நடத்துவது, புதுவையில் நிறுத்தப்பட்ட கால்நடை தீவனத்தை உடனே வழங்கவேண்டும்.

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உள்ள முறைகேடுகள் தொடர்பாக பால் உற்பத்தியாளர்களை இணைத்து விசாரணைக்குழு அமைக்கவேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story