கைவினை பொருட்கள் கண்காட்சி
புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் கைவினை பொருட்கள் கண்காட்சியை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
புதுச்சேரி
புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் கைவினை பொருட்கள் கண்காட்சியை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
கைவினை பொருட்கள் கண்காட்சி
மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் கடற்கரை காந்தி திடலில் கைவினை பொருட்கள் கண்காட்சி (காந்தி சில்ப் பஜார்-2023) திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டனர்.
கண்காட்சியில் கைத்திறன் சந்தைப்படுத்துதல் மற்றும் சேவை மையங்கள் மூலம் தேர்தெடுக்கப்பட்ட 100 கைவினை கலைஞர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த பாரம்பரியமிக்க கைவினை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சி
இந்த கண்காட்சியில் நூல் தையல் வேலைகள், கண்ணாடி நகைகள், தரை விரிப்புகள், வடமாநில கலை உலோக பொருட்கள், கலைநயம் மிக்க கல் படைப்புகள், அச்சிடப்பட்ட துணி வகைகள், பீகார் ஓவியங்கள், குஜராத் புடவை வகைகள், பட்ட சித்திர ஓவியங்கள், ஒடிசா வெள்ளி நகைகள், மரச்சிற்பங்கள், காகித கூழ் பொம்மைகள், தஞ்சாவூர்-மைசூர் ஓவியம் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு வாய்ந்த கைவினை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியை கடற்கரைக்கு வந்திருந்த உள்ளூர், வெளிமாநிலங்களை ஆர்வமுடன் பார்வையிட்டு தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது.