முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து
புதுச்சேரி
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மக்களுக்கு குறிப்பாக மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விஷூ நல்வாழ்த்துகளை (மலையாள புத்தாண்டு) தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அறுவடை விழாவாக கொண்டாடப்படும் இந்த விழாவையொட்டி செல்வம் பெருகவும், வளம் கொழிக்கவும், கிடைத்த செல்வம் நிலைக்கவும் வேண்டி கோவில்கள், வீடுகளில் மக்கள் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
இத்தகைய சிறப்புமிக்க இத்திருநாளில், அனைவரிடத்தும் அன்பையும், மகிழ்ச்சியையும் பரப்பி, ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த நாம் உறுதியேற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை விஷூ திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story