அன்பழகனுக்கு கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து
பிறந்தநாள் கொண்டாடிய அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகனுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி
பிறந்தநாள் கொண்டாடிய அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகனுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
அன்பழகன் பிறந்தநாள்
புதுவை கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி காலையில் அவர் தனது தாய் கமலா அம்மாளிடம் ஆசிபெற்றார்.
அன்பழகன் பிறந்தநாளையொட்டி மாநில அவைத்தலைவர் அன்பானந்தம் தலைமையிலும் பொருளாளர் ரவி பாண்டுரங்கன் முன்னிலையிலும் மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தமிழிசை-ரங்கசாமி வாழ்த்து
பிறந்தநாள் கொண்டாடிய அன்பழகனுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய் சரவணன்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
அ.தி.மு.க. மாநில ஜெயலலிதா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர், முன்னாள் மாநில செயலாளர் நடராஜன், இணை செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், திருநாவுக்கரசு, மகாதேவி, துணைத்தலைவர்கள் ராஜாராமன், சின்னதுரை, நகர செயலாளர் அன்பழக உடையார்.
மாநில துணை செயலாளர்கள் பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி, எம்.ஏ.கே.கருணாநிதி, காந்தி, ஜெயசேரன், குணசேகரன், கணேசன், மூர்த்தி, நாகமணி, குமுதன், மேற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், உழவர்கரை தொகுதி செயலாளர் பொன்னுசாமி உள்பட கட்சி நிர்வாகிகள், உப்பளம் தொகுதி பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.