ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

புதுவை சின்ன கொசப்பாளையத்தை சேர்ந்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது,

புதுச்சேரி

புதுவை சின்ன கொசப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரிஷி என்கிற ரிஷிகுமார் (வயது 24). இவர் மீது கொலை, வெடிகுண்டு வீச்சு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது ரிஷிகுமார் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

ரிஷிகுமார் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் அவரது நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் தடுப்பு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கிழக்கு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுவாதி சிங், மாவட்ட மாஜிஸ்திரேட் மணிகண்டனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ரிஷிகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள ரிஷிகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதற்கான உத்தரவு நகல், சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் உருளையன்பேட்டை போலீசாரால் வழங்கப்பட்டது.


Next Story