ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

புதுச்சேரி

வில்லியனூர் சேந்தநத்தம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி புகழ் என்கிற புகழரசன் (வயது 21). இவர் மீது கொலை வழக்கு, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக புகழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் புகழ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வில்லியனூர் போலீசார், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். அதையேற்று ரவுடி புகழை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை வில்லியனூர் போலீசார், காலாப்பட்டு சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். இதையடுத்து புகழ் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.


Next Story