மின்மோட்டார் திருட்டு
திருநள்ளாறை அடுத்த மடப்படம் பகுதியில் போர்வெல்லில் மின்மோட்டார் திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டுச்சேரி
திருநள்ளாறை அடுத்த செருமாவிலங்கையில் வசிப்பவர் முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து. வாஞ்சியாறுக்கு அருகில் மடப்புரம் பகுதியில் இவருக்கு சொந்தமான மீன் வளர்க்கும் குளம் உள்ளது. இன்று குளத்தை பராமரித்து வரும் பாதுகாவலர் மாதவன் வழக்கம்போல் அங்கு சென்றார். அப்போது போர்வெல்லில் இருந்த மின்மோட்டார் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story