மரக்கிளைகள் வெட்டி அகற்றம்


மரக்கிளைகள் வெட்டி அகற்றம்
x

புதுவை சட்டசபை வளாகத்தில் மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது.

புதுச்சேரி

புதுவை சட்டசபை வளாகத்தில் 40 ஆண்டுகள் பழமையான மஞ்சள்கொன்றை மரம் உள்ளது. முதல்-அமைச்சரின் அலுவலகம் அருகே நிற்கும் இந்த மரம் அலுவலக கட்டிடத்தின் மீது சாய்ந்து விழுவதுபோல் இருந்தது. மேலும் மரக்கிளைகள் அந்த வழியாக செல்லும் கார்கள் மீது உரசி சேதப்படுத்தின. இதைத்தொடர்ந்து இன்று வனம் மற்றும் தீயணைப்புத்துறையினர் அங்கு வந்து கட்டிடத்தின் மேல் படர்ந்த நிலையில் இருந்த கிளைகளை வெட்டி அகற்றினார்கள். மேலும் கார்களை உரசியபடி தணிவாக இருந்த கிளைகளையும் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. இந்த பணிகளை சபாநாயகர் செல்வம் நேரில் வந்து பார்வையிட்டார்.


Next Story