கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி ஜனநாயக கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

ஜனநாயக கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்டாஞ்சாவடியில் உள்ள கட்டுமான தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கட்டுமான தொழிலாளர் சம்மேளன அகில இந்திய தலைவர் சோ.பாலசுப்ரமணியன், மோதிலால், புருஷோத்தமன், உடல் உழைப்போர் சங்க பொதுச்செயலாளர் விஜயா, ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்க செயற்குழு உறுப்பினர் மல்லிகா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.7,500 அறிவிக்க வேண்டும், விழாக்கால போனஸ் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், பட்ஜெட் கூட்டத்தில் அறிவித்த கட்டுமான தொழிலாளர்களுக்கான சமூக பாதுகர்பபு பணப்பலன்கள் தொடர்பான அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story