தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

புதுச்சேரி

ஒருமுறை பயன்படுத்தப்படும் 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை புதுவையிலும் அமல்படுத்தப்பட்டது. புதுவையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விஞ்ஞானி பூர்ணிமா புதுவை வந்தார்.

தொடர்ந்து அவர், புதுச்சேரி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை பொறியாளர் ரமேஷ், அதிகாரிகள் சீனுவாசராவ், கென்னடி, செல்வநாயகி, புதுச்சேரி நகராட்சி அதிகாரி துளசிராமன் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து புதுவை நகர பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அந்த வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 முதல் ரூ.1,000 என மொத்தம் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story